TNTET- புதிய தலைமுறை கல்வி
TNTET / टीईटी / TET - Teacher Eligibility Test Updates / Teacher Recruitment /SARKARI
NAUKRI NEWS / SARKARI NAUKRI News
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் – 3 : CHILD DEVELOPMENT AND PEDAGOGY
வளர்ச்சிப் பருவங்கள்
சமூகத் தன்மையை வளர்க்கும் காரணிகள் - கட்டூக்கம், குழு ஊக்கம், பணி ஊக்கம்.
சமூகப் பணிகளை வளர்க்க என்ன செய்யவேண்டும் - ஆசிரியர்கள் மாணவர்களிடையே நமது பள்ளி, நமது நண்பர்கள், நமது பணி என்ற பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும்.
ஒழுக்கம் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது - நடத்தை, செயல், குணம்.
எந்த இயக்கங்களின் மூலம் பண்பு வளர்ச்சி அல்லது ஒழுக்கத்தைப் பேண முடியும் - செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம்.
பண்பு வளர்ச்சியை வளர்க்கும் காரணிகள் - நாட்டுப் பற்று, சமூகத் தொண்டு, இறைவழிபாடு, நேர்மையாக செயல்படுதல்.
கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் போன்ற அறிவுவளர்ச்சிக்கு அடிப்படையாக சமுதாயத்தால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் - பள்ளிக்கூடம்.
பள்ளிக்கூடங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கக்கூடாது - ஊரின் நடுப்பகுதி, போக்குவரத்து அதிகமுள்ள பகுதி, ரயில் பாதை, கடைத் தெரு போன்ற மக்கள் இரைச்சல் மிகுந்த இடம், தொழிற்சாலைக் கழிவுகள், புகை, கரி, சூளைகள், மயானம்.
பள்ளிக்குரிய நிலம் எங்கு இருக்கக்கூடாது - ஏரி, ஆற்றோரம், மலையோரம், ஈரம் மிகுந்த இடங்களில்.
பள்ளிக்குத் தேவையான சிறப்பம்சங்கள் என்ன - நூல் நிலையம், ஆய்வுக்கூடம், பொருட்காட்சிக் கூடம், பருவக்காற்று, மழை, வெள்ளம், புயல் உட்படாத சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.
பள்ளிக்குத் தேவையான சுகாதார வசதிகள் - கட்டடம், தள அமைப்பு, வகுப்பறைகள், தாழ்வாரம், கட்டட வடிவமும், நோக்கும் திசையும், வெளிச்சம், காற்றோட்டம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், பள்ளித்தோட்டம், குப்பைக் குழி.
பள்ளித் தள அமைப்பு எப்படி இருக்க வேண்டும் - கெட்டியாக, கருங்கல், சிமெண்ட், செங்கல்களால் ஆனதாக இருக்க வேண்டும். தளத்தை தினமும்,சுத்தம் செய்வதுடன் ஈரம் இருக்கக்கூடாது.
30 மாணவர்கள் கொண்ட வகுப்பறை எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும் - 450 சதுர அடியில்.
வகுப்பறையில் வாசற் கதவு எந்தப் பக்கம் அமைவது நல்லது - ஆசிரியரின் இருக்கைக்கு பக்கவாட்டில்.
தாழ்வாரம் எங்கு இருக்க வேண்டும் - வகுப்பறையின் இரு பக்கங்களிலும்.
தாழ்வாரத்தின் பயன் என்ன - அதிக வெளிச்சமும், வெப்பக்கதிர்வீச்சும் தவிர்க்குமாறு அமைக்க வேண்டும்.
கட்டட வடிவம் எப்படி இருக்க வேண்டும் - எல், எச், இ, எல் போன்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் இருப்பது நல்லது.
ஜன்னலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் - தரையிலிருந்து மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில்.
ஜன்னலின் பயன் என்ன - மாணவர்கள் எழுதப் படிக்க போதிய வெளிச்சம் பெற முடியும்.
குடிநீர் எப்படி வழங்க வேண்டும் - குழாய் மூலம் அல்லது பானைகளில் வைத்து, பானையை தினமும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
கழிப்பறை வசதி - மாணவ, மாணவியருக்கு தனித்தனியே சிறுநீர் மற்றும் கழிப்பறை வசதி வேண்டும்.
கழிப்பறை பள்ளிக்கட்டடத்தின் எத்தனை அடிக்குள் இருக்கக் கூடாது - 40 அடி.
கழிப்பறை எண்ணிக்கை எவ்வாறு அமைய வேண்டும் - மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப.
ஒரு மாணவர் விளையாட எத்தனை அடி பரப்பு தேவை - சுமார் 50 சதுர அடி பரப்பு.
விளையாட்டின் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் மாற்றம் என்ன - குழு வளர்ச்சி, ஒருமைப்பாடு, விட்டுக்கொடுத்தல்.
விளையாட்டின் மூலம் குழந்தைகளிடையே ஏற்படும் மாற்றம் என்ன - குழு வளர்ச்சி, ஒருமைப்பாடு, விட்டுக்கொடுத்தல்.
விளையாட்டின் மூலம் குழந்தைகள் என்ன பலன் அடைவார்கள் - நல்ல ரத்த ஓட்டம், மன மகிழ்ச்சி.
பள்ளித் தோட்டம் அமைப்பதின் நோக்கம் என்ன - பள்ளிக்கு அழகைக் கொடுக்கும், உயிரியல், தாவரவியல் பாடங்களை நேரடி அனுபவம் மூலம் கற்கலாம்.
கூரை எவ்வாறு அமைய வேண்டும் - சூரிய வெப்பத்தை உட்செலுத்தக் கூடாது.
எந்தக் கூரையைப் பயன்படுத்தக்கூடாது - சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள், துத்தநாகத்தகடு, தென்னங்கீற்று, பனை ஓலை.
கூரை எவ்வாறு அமைக்கவேண்டும் - மட்டமாக இருந்தால் 12 அடிக்கு குறையாமல்.
மாணவர்களுக்கான தனி அறைகளின் அளவு எவ்வளவு - ஆதாரப் பள்ளி மாணவருக்கு 15 சதுர அடி. தொடக்கப்பள்ளி மாணவருக்கு - 9லீ சதுர அடி. உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு - 11லீ சதுர அடி.
ஆசிரியர்களின் அறை எப்படி இருக்க வேண்டும் - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தனித்தனியாக.
வேளாண்மை சாதனங்கள் - மண்வெட்டி, கடப்பாரை, பூவாளி, வாளி, குடம், அரிவாள், டிராக்டர், மின் மோட்டார், கரும்பு பிழிவான்.
இசைக் கருவிகள் - ஜால்ரா, ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை, சுருதிப்பெட்டி, பியானோ, தவில், தபேலா, சலங்கை, கித்தார்.
நெசவுக் கருவிகள் - சட்டத்தறி, நாடா, சர்க்கா, தார்க்குழல், நூல், மிதிகள், பண்ணை முளைகள், பாவு உருளை, துணி உருளை, எண்ணெய்க்கூடு.
ஓவியக் கருவிகள் - வண்ண சுண்ணாம்புக் கட்டி, தூரிகை, பேனா, கறுப்பு மை, அளவுகோல்.
தையல் கருவிகள் - நூல்கள், ஊசிகள், மாதிகள், மேட்டின் துணி, கத்திரி, அளவு நாடா.
தச்சுவேலைப் பொருட்கள் - சிறிய, பெரிய உளிகள், கத்தி, மூலைமட்டம், டி மட்டக் கருவி, உப்புக் காகிதம், ஆணி, பெவிக்கால், துளையிடும் கருவி.
தொழிற்கூட அறையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் - நல்ல வெளிச்சம், காற்றோட்ட வசதி.
தொழிற்கூட அறையின் ஜன்னல் கதவுகள் எதனால் செய்யப்பட்டிருக்க வேண்டும் - கண்ணாடி அல்லது மரத்தால்.
தலைமையாசிரியர்களின் பொறுப்பின்கீழ் உள்ள பட்டியல்கள் - பள்ளி வரலாற்றுக் குறிப்புப் புத்தகம், ரசீது புத்தகம், தினசரி வரவுப் பதிவேடு, சிறப்புக் கட்டணம் வசூல் பட்டியல்.
வகுப்பு ஆசிரியரின் பொறுப்பில் உள்ள பட்டியல்கள் எவை - தேக்கப் பட்டியல், சுகாதாரப் பட்டியல், தொழில், கலைப் பயிற்சி பதிவேடுகள், விளையாட்டு, சமூகக் கலைபதிவேடுகள், பெற்றோர் சங்க கூட்டக் குறிப்பு.
மாணவர்கள் வைக்கவேண்டிய பட்டியல்கள் - தோட்டவேலை பற்றிய பதிவேடுகள், நாட் குறிப்புப் பதிவேடு, கொடி வணக்க கல்விப் பயணக் கிராமசேவை பற்றிய விவரக் குறிப்பு பட்டியல், மாத ஆண்டு அறிக்கை.
சத்துணவுத் திட்ட விவரக் குறிப்பு பட்டியல்களில் உள்ள காரணிகள் எவை - மாணவர்களின் வருகைப்பதிவேடு, தினமும் வழங்கப்பட்ட உணவு வகைகள் குறிப்பு, உணவுப் பொருள் செலவு செய்யப்பட்ட பதிவேடு, உணவுப் பொருட்கள் கையிருப்புப் பதிவேடு.
ஒழுங்கு என்பதன் பொருள் - பள்ளியில் பின்பற்றப்படும் திட்டங்கள் மற்றும் பள்ளியின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடத்தல், உத்தரவுகளுக்கு கீழ்படிதல்.
ஒழுங்கைப் பற்றிய பழைய கருத்து - மாணவர்களிடத்தில் அச்சம், அடித்தல், தண்டனை.
ஒழுங்கு பற்றிய தற்காலக் கருத்து - பணிவுடன் கீழ்படிதல்.
ஒழுங்கை எவ்வாறு ஏற்படுத்தலாம் - அமைதி, உழைப்பு.
மாணவரை மாணவர்களே தங்களின் பிரதிநிதிகளாக நியமிப்பது - மாணவர்களின் சுய ஆட்சி.
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு ஒழுங்கை கடைபிடிக்க வழிகாட்டுவது யார் - வகுப்பு மாணவர் தலைவன்.
பள்ளி நிர்வாகத்தில் மாணவர் தலைவர்களை நியமிப்பதன் பயன் என்ன - கடமையும், பொறுப்புணர்ச்சியும் மாணவர்களுக்கு அதிகரிக்கும்.
மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவர்கள் பிரதிநிதிகளையும், அங்கத்தினர்களையும் பணியாற்றச் செய்வது - மாணவர் சபை.
பள்ளி மாணவத் தலைவனை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் - கல்வி விளையாட்டில் வியக்கத்தக்க இடம், நன்னடத்தை, முற்போக்கு எண்ணங்களின் அடிப்படையில்.
பள்ளி மாணவர் தலைவனின் பணிகள் - பள்ளி வேலைவகளில் தலைமை ஆசிரியருக்கு உதவுதல், பள்ளி அணிவகுப்பை நடத்துதல்.
பள்ளிக்கு வரும் பிரமுகர்களை வரவேற்று கௌரவிப்பது - பள்ளி மாணவர் தலைவன்.
வகுப்பு மாணவர் தலைவனின் பணிகள் - வகுப்பு ஆசிரியருக்கு உதவுவது, வகுப்பு நிர்வாகத்தில் செயலராகப் பணியாற்றுவது, அமைதியைக் கடைப்பிடிப்பது.
பள்ளியில் வழங்கப்படும் பரிசுகளால் விளையும் நன்மைகள் - ஊக்கமும், முயற்சியும் ஏற்படும்; பெருமையும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பரிசுப்பொருட்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் எதிர்காலத்தில் பயன்படும்.
பரிசு வழங்குவதால் ஏற்படும் தீமைகள் - பரிசு பெறுபவர் தன்னைத்தானே பெரிதாகக் கருதுவார்; பரிசு பெறாதவர் ஏமாற்றம், வருத்தம், பொறாமை அடைவார். பரிசு பெறாதவருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படலாம்.
பள்ளியில் தண்டித்தலின் நோக்கங்கள் - குற்றம் செய்தவரை எதிர்காலத்தில் குற்றம் புரியாது தவிர்த்தல்; குற்றம் செய்தவர்களை திருத்துல்.
தண்டனையின் வகைககள் -திட்டுதல், அபராதம் விதித்தல், அவமதித்தல், வகுப்பில் நிற்கச் செய்தல், ஏளனம் செய்தல், அடித்தல்.
பள்ளியில் அதிக தண்டனை வழங்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது - பள்ளித் தலைமையாசிரியர்.
ஆளுமையை அறிந்துகொள்ள உதவும் காரணிகள் - ஒரு நபரின் செயல்பாடுகள், நடவடிக்கைகள்.
பள்ளிகளைச் சுற்றியுள்ள இடங்களையும், குடிநீர்க் குழாய், கிணறு மற்றும் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்ய எந்த மாணவர்களை பள்ளியில் பயன்படுத்துவார்கள் - நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை.
மாணவர்கள் நலச் செயல்களை மேம்படுத்தும் காரணிகள் - போதிய காற்றோட்டம், ஒளி, குடிநீர், இருக்கை வசதி, புத்தக வங்கி, நூல் நிலையம்.
எந்தக் கிழமைகளில் பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்படும் - திங்கள்கிழமை.
மாணவ, மாணவிகள் கொடி மரத்தின் முன் எந்த வடிவத்தில் நிற்க வேண்டும் - ப வடிவத்தில்,.
பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன் கூடும் காலைக் கூட்டத்தின் கால அவகாசம் எவ்வளவு - 15 நிமிடங்கள்.
மாணவர்கள் தினச் செய்தி படிப்பதினால் ஏற்படும் பயன் - பொது அறிவு, உலக நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள முடியும்.
ஆசிரியர் என்ற சொல்லின் பொருள் - குற்றத்தை நீக்குபவர், மாணவர்களிடம் குறை, நிறைகளை நீக்கி நல்வழிப்படுத்துபவர்.
தற்கால ஆசிரியர்களின் நிலை - வழிகாட்டி, நண்பர், தோழர்.
சிறந்த ஆசிரியரின் தகுதிகளாக கருதப்படுவது - ஆர்வம், பொறுமை, நேர்மை, நடுநிலை, நகைச்சுவை உணர்வு, இனிமையான குரல், இன்முகம்.
ஆசிரியர் எவ்வாறு மாணவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் - ஆசிரியரின் நேர்மை, திறமை, உயர்ந்த பண்பைப் பொருத்து.
தலைமை ஆசிரியரின் பணிகள் - திட்டமிடல், மேற்பார்வை, போதித்தல்.
பள்ளியின் அனைத்துப் பணிகளையும், முன்கூட்டி திட்டமிட்டு செயல்படுத்தும் முறைக்கு - திட்டமிடல் என்று பெயர்.
ஆசிரியர் பணிச் சங்கங்களின் பெயர்கள் - பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கம், தென்னிந்திய ஆசிரியர்கள் சங்கக் கூட்டணி, மாவட்ட ஆசிரியர்கள் கிளைச் சங்கங்கள், வட்டாரத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள், அகில இந்திய ஆசிரியர்கள் சம்மேளனம்.
யூனியனில் எந்த ஆசிரியர்கள் சேர முடியாது - அரசு மானியம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் இவர்கள் தனியாக குழு அமைத்துக்கொள்ளலாம்.
தொடக்கப்பள்ளி சங்கத்தின் நிரந்தரப் பதவி வழித் தலைவர் யார் - சரகத் துணை ஆய்வாளர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் அமைப்பதன் நோக்கம் - கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதல், கல்வித் துறையின் புதிய அணுகுமுறைகளை அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து கருத்து தெரிவித்தல்.
• வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டம் எப்போது முடங்கிப்போனது -1950.
• வார்தா எனும் ஆதாரக் கல்வித் திட்டத்தை எதை மனதில் வைத்துக்கொண்டு காந்தி தொடங்கினார் - இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான கிராம முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்துதான்.
• மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கருவியாக காந்தி முன்னிறுத்துவது எதை - கல்வி.
• கல்வியின் குறிக்கோளாக காந்தி உணர்த்துவது - தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றும் கருவி; பண்பாட்டினைப் பாதுகாக்கும் அறன்; நன்னடத்தையை வளர்க்கும், குடியுரிமை பயிற்சி அளித்தல்; அறிவு வளர்ச்சிக்கான திறவுகோல்.
• எந்த வயதை கட்டாயக் கல்விக்கான அடிப்படையாக காந்தி நிர்ணயித்திருந்தார் - 6 - 14.
• வார்தாவின் சிறப்பம்சங்கள் - 6 - 14 வரை கட்டாய இலவசக் கல்வி; தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கல்வி; அனைத்துப் பாடங்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழிலுடன் இணைக்கப்படல்; உற்பத்தியுடன் இணைந்த கல்விச் செயல்முறை; தாய்மொழியே பயிற்றுமொழி; சமயம், நன்னடத்தைக்கு முக்கியத்துவம்.
• வார்தாவின் தோல்விக்கு காரணங்கள் - சுயசார்புத் தன்மைக்கு முக்கியத்துவம்; ஆதாரக் கல்வி உளவியல் அடிப்படையில் இல்லை- எல்லாப் பாடங்களையும், கைத்தொழிலுடன் இணைக்க முடியாது - இந்தக் கல்வி முறை நகர்ப்புற மாணவர்களுக்கு பொருந்தவில்லை - உலகப்போக்குக்கு பொருந்தவில்லை - அறிவியல், கணிதம் பாடங்களுக்கு முக்கியத்துவம் இல்லை- ஆங்கிலத்திற்கு இடமில்லை - பொதுக் கல்வி அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை.
• நவீன இந்தியத் துறவி என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்.
• கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிற்காக நோபல் பரிசு பெற்றது எப்போது - 1913.
• தாகூர் கல்விக்கு புதிய வடிவம் கொடுப்பதற்காக வடிவம் கொடுக்க உதவிய அவரின் கல்வி நிலையத்தின் பெயர் - சாந்தி நிகேதன் (1901).
• சாந்தி நிகேதன் பின்னாளில் விஷ்வபாரதி பல்கலைக்கழகமாக மாறியது எப்போது - 1921.
• தாகூருக்கு நைட் விருது ஆங்கில அரசால் எப்போது வழங்கப்பட்டது - 1915.
• நைட் விருதை எதற்காக தாகூர் திருப்பி அளித்தார் - ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து.
• தாகூரின் கல்வி நோக்கங்கள் எதை ஒட்டியதாக இருந்தது - உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒழுக்க - ஆன்மிக வளர்ச்சி, சமூக வளர்ச்சியும், பன்னானாட்டு சிந்தனையும்.
• தாகூரின் கற்பித்தல் முறைகளில் முக்கியமானது - இயற்கையோடு இணைந்த கற்பித்தல் முறை.
• தாகூரின் விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மூன்று நோக்கங்கள் - கீழை நாடுகளின் கலாசாரங்களைப் போதித்தல், கிராம சீரமைப்பு, மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் இடையே பரஸ்பர ஒற்றுமையைப் பேணுதல்.
• சாந்தி நிகேதனின் பாத் பவனின் சிறப்பு - இங்கு துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை அளிக்கப்படுகிறது.
• விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முக்கியப் பிரிவுகள் - வித்யா பவன் (கீழை நாட்டு மொழிகளுக்கு முக்கியத்துவம்), சீன பவன் (சீன மொழிக்கு முக்கியத்துவம்), கலா பவன் (கைத்தொழிலுக்கு முக்கியத்துவம்), சங்கீத் பவன் (இசைக்கு முக்கியத்துவம்), ஹிந்தி பவன்(ஹிந்தி மொழி, இலக்கியத்திற்கு முக்கியத்துவம்), அத்யாபக் சிக்ஷா பவன் (ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்), ரவீந்திரபவன் (தாகூரின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்), இஸ்லாமிய ஆய்வுப் பிரிவு.
• இந்தியக் கல்வி மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர்கள் யார் - காந்திஜி, தாகூர்.
• அரவிந்தர் பன்னாட்டு பல்கலைக்கழக மையம் உருவான ஆண்டு - 1952.
• கல்வியின் உண்மையான அடிப்படை என அரவிந்தர் கூறியது யாது - மன ஆராய்ச்சி.
• குழந்தைகளை அரவிந்தர் எப்படி உவமையாகச் சொன்னார் - சுயமேம்பாடு அடையக் கூடிய உயிரி.
• அரவிந்தரின் கூற்றுப்படி ஆசிரியர் என்பவர் யார் - கற்றலுக்கு உதவுபவர்.
• அறிவு வளர்ச்சிக்கான சாதனம் என்று அரவிந்தர் கூறுவது எதை - மனம்.
• கல்வி எதைப் பெற்றுத்தரும் கருவியாக அரவிந்தர் கூறுகிறார் - ஆன்ம விடுதலையையும்,பொருள் சார்ந்த வாழ்க்கை வளத்தையும்.
• அரவிந்தர் ஆசிரமப் பள்ளியை முதன் முதலில் எப்போது உருவாக்கினார் - 1943.
• ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் ஜே.கே. வாழ்ந்த காலம் - 1896 - 1986
• ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘குருவின் காலடியில்’ எனும் நூலை எழுதும்போது அவரின் வயது எத்தனை - 16.
• ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வித் தத்துவங்கள் :
• குழந்தைகளை அதன் போக்கில் அனுமதித்து அமைதிப்படுத்தும் வழிமுறையே கல்வி.
• கல்வி கற்பதற்கு செவிப்புலனால் கேட்பதும், புத்தகங்களைப் படிப்பது மட்டும் போதாது. இதனால், அறிவு திணிப்புத்தான் மிஞ்சும்.
• பார்த்ததையும், கேட்டதையும், படித்ததையும், அகநிலையில் தன் அனுபவங்களுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்தலே கற்றல்.
• பாடக்கூறுகளை ஒட்டுமொத்தமாக இணைத்து, அதைப் பயன்படுத்தி சிந்தித்தாலே நமது தனித்தன்மை வெளிப்படும். அதுவே உண்மையான கற்றல்.
• ஒரு முக சிந்தனையில் நம் புலன்களின் சக்திகள் அனைத்தும் குறிப்பிட்ட பொருள் அல்லது புள்ளியில் குவிக்கப்படுகிறது. கவனத்தில் அப்படியொரு குவி மையம் இல்லை.
• கற்றலில் சுதந்திரம் என்பது தன்னைச் சுற்றியுள்ள யாவற்றையும், அனைத்துக் கருத்துக்களையும், எவ்வித நிர்பந்தமோ, வற்புறுத்துதலோ இன்றி உற்று நோக்கி, அறிந்து பின்னர் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆராயும் தன்மை பெற்றிருத்தலே.
• கற்பித்தலிலும், கற்றலிலும் போட்டி இருத்தல் கூடாது. போட்டியானது, அச்சம், வெறுப்பு, தோல்வி, பயம், வன்முறை ஆகியவைகளுக்கு வழிவகுக்கிறது.
• எவ்வித நிர்பந்தமும் இன்றி சுயமாக ஆராய்ந்தறியும் மனநிலையைப் பெற்றிருப்பதும், சிந்தித்து சீர்தூக்கி செயல்படுவதும்தான் சுதந்திரம்.
• அயல்நாட்டு கல்வி சிந்தனையாளர்கள் :
• ரூஸோ - குழந்தை மையக் கல்வி குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
• ஃபுரேபெலின் - கிண்டர் கார்டன்.
• மாண்டிச்சோரி அம்மையார் - புலப்பயிற்சிக் கல்வி.
• வான்டூயின் - முற்போக்குக் கல்வி.
• பெர்ட்ரண்டு ரஸ்ஸலின் - மேம்பட்ட சமுதாய நிலைக்கான கல்வி.
• ஏ.எஸ்.நீலின் - கோடைமலைப் பள்ளி.
வீன் ஜாகுவஸ் ரூஸோ :
• நவீனக் கல்வி முறைக்கு வித்திட்டவர்
• 1712 ஆம் ஆண்டு ஜெனிவாவில் பிறந்தார்.
• 1750 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியலின் முன்னேற்றம் என்ற நூலை எழுதினார்.
• 1753ஆம் ஆண்டு மக்களிடையே சமத்துவத்தின் தோற்றம் என்ற நூலை எழுதினார்.
• 1762ஆம் ஆண்டு சமூக ஒப்பந்தம், எமிலி அல்லது கல்வியைப் பற்றி - என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார் (ஐரோப்பாவின் கல்வி நிலைகளை சாடிய நூல்கள் இவை.).
• குழந்தையை தனியாக வளர விடுங்கள்; அவன் இயற்கைச் சூழலில் வளரட்டும்; சமூகத்தின் செயற்கைச் சூழல், அவனது இயல்பான வளர்ச்சியைத் தடைசெய்து, முன்னேற்றத்தை தடுக்கின்றது என்பதுதான் இவருடைய தத்துவம்.
• ரூஸோவின் தத்துவம் எப்படி அழைக்கப்பட்டது - இயற்கைக் கோட்பாடு.
• எத்தனை வயது வரை குழந்தைகளைக் காத்திட ரூஸோ வலியுறுத்துகிறார் - 12 வயது வரை.
• பயனுள்ள கல்வி என்பது - சுயமுயற்சியாலும், சுற்றுப்புறத்தை ஆராய்ந்தறிதலாலும் பெற்றிடுவதே ஆகும்.
• குழந்தைகள் ஒழுக்கத்தை எப்படி கற்றுக்கொள்வார்கள் என்று ரூஸோ கருதுகிறார் - இயற்கையின் விளைவுகளில் இருந்து குழந்தைகள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக்கொள்வர்.
• சொல்வழிக் கற்றல் என்பது - நினைவுச் சுமையை மட்டுமே அதிகரிக்கச் செய்யும்.; உண்மையான கற்றல் நிகழாது.
• எமிலி அல்லது கல்வியைப் பற்றி நூலில் எமிலி என்பது என்ன - அந்தக் கதையில் வரும் கற்பனைச் சிறுவனின் பெயர்.
• புரோபெலின் என்பவர் - ஜெர்மானியக் கல்வியாளர்
• கிண்டர்கார்டன் எனப்படும் பாலர் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் - ஃபுரோபெல்
• கிண்டர் கார்டன் என்பது -குழந்தைகள் பூங்கா.
• கருத்தியல் என்பது - லட்சியம்.
• கிண்டர்கார்டனின் முதன்மைக் கூறுகள் - சுயமான செயல், படைப்பாற்றல், சமூகப் பங்கேற்பு.
• ஜேக் அண்ட் ஜில், ஹம்டி டம்டி, சின்ட்ரலா போன்ற நர்சரி குழந்தைகளின் பாடல்களை எழுதியது - புரோபெல்.
• உலகில் முதல் குழந்தைப் பூங்கா பள்ளியைத் தோற்றுவித்தவர் - புரோபெல்
• வாருங்கள் நாம் குழந்தைகளுக்காக வாழ்வோம்’ என்ற பொன்மொழியை உதிர்த்தவர் - புரோபெல்.
மாண்டிசோரி அம்மையார் -
• இத்தாலி நாட்டு மருத்துவர்
• குழந்தைகள் வீடு எனும் பள்ளியை முதன் முதலில் இவர் தொடங்கிய ஆண்டு 1907.
• மாண்டிசோரி அம்மையார் இந்தியா வந்த ஆண்டு - 1940.
• இவரின் முக்கியக் கோட்பாடுகள் : தனிநபர் வளர்ச்சி, புலப்பயிற்சி, சுய கற்றல்.
• மாண்டிசோரி முறை செயல்படும் விதம்:
• பிரதியேகமாக உருவாக்கப்பட்ட கற்றல் சூழல்.
• ஆசிரியரின் நேரடிப் பார்வையில் சுய கற்றல்.
• உணவருந்த, ஓய்வெடுக்க, சுய கற்றல் சாதனங்களை இயக்கிக் கற்க தனித்தனி அறைகள்.
• நிலையான பாட வேளைகள் கிடையாது.
• குழந்தைகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தச் செயலிலும் ஈடுபட சுதந்திரம் உண்டு.
• மாண்டிசோரி கல்வியில் ஆசிரியர்கள் எப்படி அழைக்கப்படுகின்றர் - இயக்குநர்.
• 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கற்பித்தல் முறைகளில் பாரம்பரியப் போக்குகளிலிருந்து முற்போக்கான அணுகுமுறைகள் தோன்றத் துவங்கியதற்கு காரணம் - ஜான் டூயி.
• கல்வியில் ஆராய்ச்சிப் போக்கைத் துவக்கி வைத்த பெருமை யாரைச் சேரும் - ஜான் டூயி.
• டூ யியின் பொதுத் தத்துவங்கள்: எதுவும் தற்காலிகமானவையே, உண்மைகளும் மாற்றத்திற்குட்பட்டவையே, இறுதி மதிப்புகள் என்று எதுவுமேயில்லை, மனித வாழ்க்கை சோதனைகளும் நோக்கத்தோடு கூடிய செயல்களின் தொடராகும்.
• டூயி எம்முறைக் கல்வியை ஆதரித்தார் - செயல்வழிக் கற்றல்.
• எந்த ஆண்டு நவோதயா பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன - 1986.
• நவோதயா பள்ளிகளுக்கு இன்னொரு பெயர் - முன்னோடிப் பள்ளி.
• எந்தப் பரிந்துரைப்படி நவோதயாப் பள்ளிகள் கொண்டுவரப்பட்டன - இந்திய தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி.
• முன்னோடிப் பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - சமுதாயப்பள்ளிகள், பிரான்சிஸ் பார்கள் பள்ளி, டூயி சோதனைப்பள்ளி, வால்டார்ஜஃப் பள்ளிகள்.
• சுதந்தரப் பள்ளிகள் இயக்கம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1960.
• சுதந்தரப் பள்ளிகளுக்கு மற்றொரு பெயர் - திறந்தவெளிப் பள்ளி.
• சுதந்தரப் பள்ளி எதற்கு எதிராக தொடங்கப்பட்டது - அமெரிக்கப் பொதுப்பள்ளி கல்வி முறைக்கு எதிராக.
• சமுதாயப் பள்ளிகள் எந்தக் கல்வியை வற்புறுத்தின - தொழிற் கல்வியை
• சமுதாயப் பள்ளிகளின் வகைகள் - சமுதாயத்தில் நிலவும் தொழில்களையே பாடச் செயல்களாக அமைத்தல், சமுதாயப் பிரச்சினைகளில் பெரியவர்களோடு ஒத்துழைக்கும் வகையில் மாணவர்களிடம் சமுதாயத்திறன்களை வளர்த்தல், சமுதாயத்தில் காணப்பட்ட மேம்பட்ட பண்புகள், செயல்கள் அனைத்தையும் சிறிய வகையில் பிரதிபலிக்குமாறு பள்ளிகளை அமைத்தல், சமுதாயப் பள்ளிகளை முன்னேற்றிடவும், விரிவுபடுத்திடவும் பள்ளிகள் செயல்படுதல்.
• முற்போக்குக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் -பிரான்சிஸ் பார்க்கர்.
• பிரான்சிஸ் பார்க்கர் முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்வி முறை - குழந்தை மையப் போக்கு கொண்ட முற்போக்குக் கல்வி முறை.
• குழந்தை ஒரு தெய்வீகப் பிறவி என்று கூறியவர்கள் யாவர் - பிரான்சிஸ் பார்க்கர், ரூஸோ.
• பிரான்சிஸ் பார்க்கர் கல்வி முறையில் நேரிடைக் களப் பயணங்கள் மூலம் அறிவியலும், புவியியலும் கற்பித்தல் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது - குவின்ஸி.
• வால்டார் ஐஃப்க் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர் - ரூடால்ஃப் ஸ்டெய்னர்.
• ரூடால்ஃப் ஸ்டெய்னருக்கு கல்வி வளர்ச்சியில் ஊக்கமளித்த இந்திய கல்வியாளர் - பிளாவட்ஸ்கி அம்மையார்.
• டூயி சோதனைப்பள்ளி எங்கு எந்த ஆண்டு துவங்கப்பட்டது - 1896 ஆம் ஆண்டு சிகாகோவில் தொடங்கப்பட்டது.
• அண்மைப் பள்ளிகளுக்கான கருத்தினை கோத்தாரிக் கல்விக் குழு முதன் முதலில் எந்த ஆண்டுகளில் வெளியிட்டது - 1964 - 66
அண்மைப் பள்ளிகளின் நன்மைகள்
• பல்வேறு தரப்பட்ட குழந்தைகள் ஒரே பள்ளியில் சேர்ந்து பயிலுவதால், குழந்தைகளிடம் சிறந்த அனுபவப் பகிர்வு நல்ல கல்விக்கு அடிப்படை.
• பணக்காரக் குழந்தைகளும், அதிகார வர்க்கத்திலுள்ளோரின் குழந்தைகளும் ஒன்றாகப் படிப்பதால், அவர்கள் கல்வித் தரத்தையும், பள்ளித் தரத்தையும் உயர்த்திட முனைந்திடுவர். பள்ளியின் குறைகளைக் களைந்து அப்பள்ளியின் முன்னேற்றத்திற்கும் முயற்சி செய்வர்.
• தொடக்கப் பள்ளிகளின் தற்போதைய கல்வித் தரம் உயர்த்தப்படும்.
பள்ளிச்சாராக்கல்வி என்பது
பள்ளியில் படிக்காத பொதுமக்களுக்கு கல்வி அறிவு புகட்டுவது; முறைப்படி பள்ளியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் கல்வி பயில்வதால் இது பள்ளிசாரக்கல்வி.
பள்ளிசாராக் கல்வி எந்தப் பகுதிகளில் ஆரம்பிப்பார்கள் - கிராமப்புறங்களில்
எந்த நேரங்களிலும் நடத்தப்படும் - இரவு நேரங்களில்.
பள்ளிசாராக் கல்வி கற்பதனால் என்ன பயன்? - அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். எழுத, படிக்க, தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோர் சங்கம் அமைத்தலில் நோக்கம் -
ஆசிரியருக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த.
பெற்றோர் சங்கத்தின் செயலாளர் யார் - பள்ளித் தலைமையாசிரியர்.
பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டம் எவ்வளவு நாளுக்கு ஒருமுறை நடைபெறும் - மாதம் ஒரு முறை.
ஆசிரியரின் சமூகத் தொண்டுகள் -
சுகாதார வாரம் என அறிவித்து கிராம, நகர, பொது இடங்களை சுத்தம் செய்யலாம். நூல் நிலையம், வாசகசாலை அமைக்கலாம்.
ஆசிரியர் மாணவர்களிடம் கற்பிக்கும் பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - அன்புடனும், பரிவுடனும்
மாணவ, மாணவியருக்குத் தேவையான நோட்டுப் புத்தகத்தை எந்தசங்கங்களின் மூலம் விற்பனை செய்ய முடியும் - கூட்டுறவுச் சங்கத்தின் மூலம்.
பள்ளி ஆண்டு விழா எப்போது நடத்த வேண்டும் - ஆண்டு இறுதியில்.
பள்ளிச்சீரமைப்புத் திட்டம் என்பது -
பள்ளிக் கட்டிடம் பழுது பார்த்தல், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், கழிவறை கட்டுதல், குடிநீர் வசதி செய்தல், நூல் நிலையம் அமைத்தல், இருக்கை வசதிகளை மேற்கொள்ளல்.
பள்ளிக் கண்காட்சி என்பது -
பள்ளி ஆசிரியர்களாலும், மாணவ, மாணவிகளாலும் தயாரிக்கப்பட்ட, கை வேலை, மற்றும் கலைப் பொருட்கள் சித்திரங்கள், படத் தொகுப்புகள், கையெழுத்துப் பத்திரிகைகள் ஓரிடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விளக்குவது.
தற்காலிகமாக அமைப்பது - கண்காட்சி.
நிரந்தரமாக அமைப்பது - பொருட்காட்சி.
ஓரிரு நாட்களுக்கு மட்டும் நடைபெறுவது - கண்காட்சி.
மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளிடையே இணைப்பை ஏற்படுத்துவது - பள்ளி இணைப்புத் திட்டம்
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியும் எத்தனை நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படவேண்டும் - மூன்று அல்லது பத்து.
ஒவ்வொரு நடுநிலைப்பள்ளியையும் எத்தனை தொடக்கப் பள்ளிகளுடன் இணைக்கவேண்டும் -எட்டு அல்லது பத்து.
பள்ளி இணைப்புத் திட்டத்தின் மூலம் என்ன வளர்ச்சி நடைபெறும் - கல்வி வளர்ச்சி மற்றும் கூட்டுறவு.
பள்ளி இணைப்புத் திட்டத்தின் பயன்கள் -
பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த.
பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது ஒருவராமோ, ஒரு மாதமோ கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் வழங்கப்படும் பயிற்சிக்கு என்ன பெயர் - பணியிடைப் பயிற்சி.
பணியிடைப் பயிற்சியின் நோக்கம் -
ஏற்கெனவே கற்ற கல்வியை திரும்பவும் நினைவூட்ட, புதிய கல்விகருத்துக்களை தெளிவுபடுத்த, புதிய யுக்திகளையும், வழிமுறைகளையும் கற்பித்தலில் பின்பற்ற.
அரசின் மூலம் நியமிக்கப்பட்ட உரிய மருத்துவரின் மூலம் ஆண்டிற்கு ஒருமுறை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செய்யப்படும் சோதனை - பள்ளி மருத்துவப் பரிசோதனை.
எத்தனை ஆண்டுக்கொருமுறை மருத்துவப் பரிசோதனை நடைபெறும் - ஆண்டுக்கொருமுறை மருத்துவப் பரிசோதனையின் தேவை.
மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மாணவர்கள் நோய் பரவாமல் தடுக்க ஆரோக்கியமாக, சுகாதாரத்தோடு வாழ.
கற்றவர் அனைவரும் கல்லாதவருக்கு கல்வி அறிவைப் புகட்டுவது - அறிவொளி இயக்கம்.
கல்லாமையை இல்லாமை ஆக்குவது, கல்லாமையை ஒழிப்பது -- அறிவொளியின் நோக்கம்
அறிவொளி இயக்கத்தின் வாசகங்கள் - கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம், கற்போம் கற்பிப்போம், பாட்டாளியை படிப்பாளியாக்குவோம், அறிவொளி தீபம் ஏற்றுவோம்.
கல்விப் பயணங்கள் என்பது -
பள்ளி மாணவர்களைப் பள்ளி நேரத்தில் அருகிலுள்ள இடங்களுக்கோ கல்வி நோக்குடன் பாட சம்மந்தப்பட்ட பல்வேறு இடங்களுக்@கா அழைத்துச் சென்று வருவதற்கு கல்விப் பயணம் என்று பெயர்.
கலை சம்பந்தப்பட்ட கல்விப் பயணங்கள் - கலைக் களஞ்சியங்களுக்கு அழைத்துச் செல்லுதல், குகைச் சித்திரம்,மலையைக் குடைந்து செய்துள்ள சிற்பங்கள், புராதனக் கட்டிடங்கள், மாளிகைகள், அரண்மனைகள் அணைக்கட்டு, பாலங்கள் முதலியவை.
தொழில் சம்மந்தப்பட்ட கல்வி பயணங்கள் - கோழிப்பண்ணை, கால்நடைப்பண்ணை, விவசாயக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், மண்பாண்டம் செய்யுமிடம், நெசவு செய்யுமிடம், சாயப்பட்டறைகள், தொழில்சாலைகள், செய்தித்தாள் அலுவலம், வங்கிகள் திரைப்படக் கல்லூரி, சிற்பக் கல்லூரி, இசைக்கல்லூரி போன்ற இடங்கள்.
கல்விப் பயணத்தின் நன்மைகள் -
நேரடி அனுபவம், ஆர்வத்துடன் பாடம் கற்றல்; ஆசிரியர் மாணவர் உறவு வலுப்பெறல், தன்னம்பிக்கை, சமுதாயப்பண்பு வளர்கிறது, புதிய இடங்களுக்கு செல்வதால் மனமகிழ்சி ஏற்படுகிறது.
ஊர்களின் பெயர்கள் சிறப்பம்சங்கள்
திருப்பதி சந்தனக் கற்கள்
கும்பகோணம் பாத்திர வேலை
திருச்செங்கோடு கற்சட்டிகள்
சீர்காழி கோரைப்பாய்கள்
பண்ருட்டி மண் பொம்மைகள்
கீழக்கரை பனையோலைப் பெட்டிகள்
தூத்துக்குடி பனைவெல்லம்
கடப்பை தட்டைக் கற்கள்
மங்களூர் கூரையோடுகள்
கலைப்பிரிவு ஆசிரியரின் தகுதிகள் - பொதுக்கல்வித் தகுதி (பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி), தொழிற் கல்வித் தகுதி (உரிய தொழிற் பிரிவில் மேல்நிலைத் தேர்ச்சி), தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி (மூன்று மாத கால பயிற்சியில் தேர்ச்சி).
பள்ளியின் அங்கீகாரம் அரசாங்கத்தால் ரத்து செய்யும் காரணங்கள் -
ஆசிரியரின் சம்பளத்தை முறைப்படி வழக்காதிருத்தல், அம்மை தடுப்பு செய்யாத மாணவர்களைப் பள்ளிகளில் சேர்த்தல், அரசால் அங்கீகரிக்கப்படாத புத்தகங்களைப் பள்ளியில் பாடமாக வைத்தல், மாணவர் வருகை குறைவு தொடர்ந்து ஏற்பட்டால், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்தல்.
கலை, தொழில் உள்ளடங்கிய பாடங்கள்-
ஓவியம், இசை, தச்சு வேலை, நெசவு, உலேரி வேலை, தோட்ட வேலை, தையல் வேலை.
கலைத் தொழில் கற்பதன் நோக்கம் - வாழ்விற்கு வளத்தையும் அமைதியையும் கொடுக்கிறது.
மாணவர்களை கலை, கைத்தொழிலில் ஏன் ஈடுபடுத்தவேண்டும் - உடல், அறிவு, விருப்பம் இணைந்து செயல்பட.
பள்ளியில் கலையும் கைத்தொழிலும் மாணவர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது-
கண்காட்சி, வகுப்பறை, சுற்றுப்புறச் சூழ்நிலையை, பள்ளி ஆண்டுவிழா, பிள்ளைகளில் தனித் திறமைகளைக் கண்டு பிடிக்கவும்.
வாழ்க்கைசார் தொழிற்கல்விப் பள்ளிகளில் சேர்ப்பதன் நோக்கம்- தொழில் கற்றுக்கொள்ள, சுயவேலை வாய்ப்பு, கட்டூக்கம், திரட்டுஊக்கம் ஏற்பட.
நேரடி அனுபவ முறை என்பது - கற்க வேண்டிய பொருட்களை நேரடியாகப் பார்த்தும் தொட்டு உணர்ந்தும், அவற்றை பல்வேறு நிலைகளில் இயக்கியும், உள்ளும் புறமும் நன்கு கவனித்தும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம்.
புலன்கள் பயிற்சி முறை எந்தக் கல்வியில் இருக்கிறது - மாண்டிசோரி இயற்கை முறை -
காமினியஸ் என்பது - இயற்கை முறையில் கல்வி கற்பது.
திட்டமும் சுயநோக்கமுறையையும் வெளியிட்டது - டால்டன்
சுற்றுவழி அனுபவ முறை என்பது - செய்தித்தாட்களையும், நூல்களையும் படிப்பதன் மூலம், செய்திகளைக் கேட்பதன் மூலம், திரைப்படம், செய்திப்படம், தொலைக்காட்சி பார்ப்பதன்மூலம், கேள்விகள், விவாதிப்பதின் மூலம் கிடைப்பது சுற்றுவழி அனுபவ முறை.
சுற்றுவழி அனுபவம் மூலம் கற்பித்தல் என்பது- வாய்மொழிப் போதனை சொல்லுதல், வினா எழுப்புதல், விவாதித்தல், படிக்கறிதல், விளக்கம் கொடுத்தல்.
நேரடியாக விளக்கம் கூறி நடத்துவது என்பது -விளக்கிக் கூறுதல் சொல்லுதல்
விளக்கிக் கூறுதலின் நன்மைகள் -
உற்சாகப்படுத்த முடியும்; அதிகச் செய்திகளைக் கொடுக்க முடியும்.
விளக்கிக் கூறுதலின் குறைபாடுகள்
பிள்ளைகளின் கவனக்குறைவும், சலிப்பும் ஏற்படும், நேரம் வீணாக்கப்படுகிறது, எழுத்தில் பிழைகள் ஏற்படும்.
வினாக்கள் கேட்பதன் நோக்கம் - கற்றலில் மீது மாணவர்களுக்கு கவர்ச்சி ஏற்படுத்துவதற்கு.
வினாக்கள் கேட்கும் முறை -
அனைவருக்கும் பரவலாக கேட்க வேண்டும், வினாவின் அமைப்பை மாற்றாமல் தெளிவாக ஒரே முறையில் கேட்க வேண்டும், வினாக்கள் கேட்கும் முறை ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது.
ஆசிரியர் வினாக்கள் கேட்பதால் ஏற்படும் பயன்கள்?
பாடங்களில் பிள்ளையின் மனநிலை அறியப்படுகிறது; அவர்கள் பெற்றுள்ள சரியான அல்லது தவறான கருத்துக்களைக் குறித்து அறிய முடியும்.
விவாதங்களில் பின்பற்ற வேண்டிய கருத்துகள் : மாணவர்களின் கருத்துக்களை ஏளனம் செய்யக்கூடாது, பின்தங்கிய மாணவர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த பதில்களை உணர்த்துவதுடன், கூட்டு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் உரிய கருத்துக்களை மட்டுமே விவாதிக்க வேண்டும்.
விவாதித்தலின் குறைபாடுகள் -
வகுப்பில் கூச்சல், ஒழுங்கு, அமைதி குறையலாம், தேவையற்ற கருத்துக்கள் பேசப்படலாம், விவாதித்தலின் நோக்கமும், தொடர்பும் புரியாமல் போகலாம்.
வாசித்தல் என்பது - பல்வேறு பாடப்புத்தகங்கள், செய்தித்தாட்கள், கதைப் புத்தகங்கள் வார, மாத சஞ்சீகைகளைப் பார்த்துப் படிப்பதே ஆகும்.
வாசித்தலின் நன்மைகள் -
மொழி, எழுத்து வளர்ச்சி ஏற்படுகிறது, பிறர் உதவியின்றிக் கற்க முடிகிறது.
வாசித்தலின் குறைபாடுகள் - எல்லா பாடங்களையும் வாசித்தே கற்க முடிகிறது. தொடர்ந்து வாசிப்பதால் கண், மனம், தளர்ச்சி ஏற்படும்.
நேரடி அனுபவ முறைகள் என்பது - செய்து காட்டல் முறை, செய்து கற்றல் முறை, செயல்திட்ட முறை, விளையாட்டு முறை.
தனித்திறமைகளை எப்படித் தெரிந்துகொள்ளலாம் -மாணவர்களின் தனித்திறமைச் செய்து காட்டுவதின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
செய்து கற்றல் முறை எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது --- அமெரிக்காவில் 1918- ஆம் ஆண்டு டால்டன் என்னுமிடத்தில்.
செய்து கற்றல் முறையை வேறு எவ்வாறு அழைக்கலாம் - டால்டன் முறை, ஒப்பந்த முறை, ஆய்வுக்கூட முறை
டால்டன் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது -ஹெலன் பாக்ரஸ்ட் என்ற அமெரிக்க அம்மையாரால்.
செய்து கற்றலின் நன்மைகள் - செயல் திறமை வெளிப்படும், தன்னம்பிக்கை சுயமுயற்சி, திறன் அறிவு, மனம், ஒருங்கிணைந்து செயல்படும்.
செய்து கற்றல் முறையின் குறைபாடுகள் - புத்தக கருத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை,மொழி, எழுத்து, பேச்சுப் பயிற்சிகளுக்கு வாய்ப்பில்லை, கற்பிக்கும் பணி குறைவு - திருத்தும் பணி அதிகம்.
தனிச்செயல் வேலை என்பது - தனியாகக் கற்று, கல்வி அறிவைப் பெற்று, நல்ல பழக்கங்கள், மனப்பான்மை திறன்களை பெறுவது.
குழுச்செயல்முறை என்பது - குழு உணர்வு, பொறுப்புணர்வு, பரந்த மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், காலத்தில் பணியை முடித்தல்.
வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் குழுக்களாக பிரிக்கலாம் -வயது, நுண்ணறிவு, ஆண், உயரம், திறமை
ஜான்டூயி எந்த நாட்டை சேர்ந்தவர் - அமெரிக்கா (சிகாகோ)
யாரால் செயல் திட்ட முறை நடைமுறைப்படுத்தப்பட்டது - 1920 ல் கில் பாட்ரிக்.
இந்தியாவின் முதன் முதலில் எந்த இடத்தில் செயல் திட்ட முறை பின்பற்றப்பட்டது - மேகாலயா.
செயல் திட்ட முறையின் அடிப்படை நோக்கம் - கற்றலுக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பு ஏற்படுத்துதல், கற்பதால் கற்றல் விரைவு படுத்தப்படும், செயலைச் செய்யும்பொழுது புலப் பயிற்சி ஏற்படுகிறது.
சுயநோக்கு முறையின் சில திட்டங்கள் -
பழந்தோட்டத்தைப் பார்வையிடல், பள்ளியில் கண்காட்சி நடத்துதல், தொழிற்சாலைக்குச் செல்லுதல், கிடைத்த அனுபவங்களை மதிப்பிடுதல்.
சுயநோக்குமுறையின் நான்கு படிகள் -
1. நோக்கம் 2. திட்டமிடல்
3. செயலைச் செய்து முடித்தல் 4. மதிப்பிடல்
நோக்கம் - கல்வி, நோக்கமுடைய செயலாக இருக்க வேண்டும். நோக்கத்தை நிறைவேற்றத் தகுந்த திட்டம் இயற்ற வேண்டும்.
திட்டமிடல் - முடிவு செய்யப்பட்ட செயல்திட்டத்தைத் தீர்மானிப்பது.
செயலைத் செய்து முடித்தல் என்பது..
தேவையான உபகரணங்களைக் கொண்டு கச்சாப் பொருட்கள் மை போன்ற பொருளை தயாரித்து முடிக்க மாணவர்களுக்கும் பயிற்சியே.
சுயநோக்கு முறையின் நன்மைகள் -
ஒரு செயலைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அறிவு, மனதில் நிலைத்து நிற்கிறது. சிந்திக்கும் ஆற்றல், செயலாற்றும் திறமை ஏற்படுகிறது.
சுயநோக்கு முறையின் குறைகள் - திறமை வாய்ந்த ஆசிரியராக இருந்தாலும், போதனைக்கு இடமில்லை. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இம்மூன்றும் ஏற்றதல்ல.
விளையாட்டு முறையின் நன்மைகள் -உடலுக்கு வலு ஏற்படுகிறது, மனத்திற்கு விருப்பத்தைத் தருகிறது. வெற்றித் தோல்வியை ஏறபடுத்துகிறது. சகிப்புத் தன்மையை வளர்க்கிறது.
பாட முறையின் மூன்று நிலைகள் -
1. முன்னுரை 2. கற்பித்தல் 3. திருப்புதல்
முன்னுரை என்பது - ஏற்கெனவே நடத்திய பாடத்தைத் தொடர்புபடுத்திக் காட்டுதல் அல்லது பாட அறிவின் தேவையை உணர்த்தி ஊக்கமளித்தல்.
கற்பித்தல் என்பது - மாணவர்களிடம் தகுந்த வினாக்களைக் கேட்பதன் மூலம் கருத்துக்களை வெளிக் கொணர்ந்து தேவையான இடத்தில் விளக்கம் கூறுவது.
திருப்புதல் - தகுந்த கேள்விகள் மூலம் கற்றவைகளை மாணவர்களின் மனதில் திரும்பவும் நினைவுகூட்டுதல்.
தொழிற்கூடப் பேச்சு முறை என்பது -
பொருளின் தேவை, வேலையைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் போன்றவைகளைக் கூறுதல் அல்லது மாணவர்களிடமிருந்து வெளிக் கொணர்தல்.
அறிவு பெறும் பாடங்கள் - புவியியல், வரலாறு, அறிவியல், கணிதம்.
திறமை தரும் பாடங்கள் - தையல் வேலை, ஓவியம் வரைதல், எழுதல், பேசுதல்.
கலை ரசனை தரும் பாடங்கள் - சங்கீதம், இசை, செய்யுள்.
திறன் வகைப் பாடத்தின் படிகள் -
1. ஆயத்தம் 2. விளக்குதல் 3. விதிகளைக் கூறல்.4. பயிற்சி
அறிவு வகைப் பாடத்தின் படிநிலைகள் -
1. முன்னுரை 2. ஆயத்தம் 3. விளக்குதல் 4. பயிற்சி.
கிண்டர் கார்டன் முறை -
விளையாட்டு முறை கோட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
கிண்டர் கார்டன் கல்வித் துறை எத்தனை வயது வரைக்கும் - 4 - 6 வயதுக்குள்.
கிண்டர் கார்டன் முறையைக் கண்டுபிடித்தவர்- ஜெர்மனியை சேர்ந்த பிரடெரிக் புரோபல்.
கிண்டர்கார்டன் முறை என்பது - விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் மூலம் கல்வி.
முதல் உலகப் போருக்கு பின் இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் தோன்றிய பள்ளி -குழந்தைப் பள்ளிகள்
மாண்டிசோரி முறை என்பது - விளையாட்டு முறை கல்வி.
கற்பிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான உபகரணங்கள் - கரும்பலகை, உருவமாதிரிகள், படங்கள், விளக்கப்படங்கள், புத்தகங்களும், பத்திரிகைகளும், திரைப்படங்கள், திரைப்படச் சுருள்கள், வானொலி, தொலைக்காட்சி, பொருட்காட்சி, கண்காட்சி.
அறிவியல் பாடத்தில் பயன்படுத்தக்கூடிய உபரணங்கள் - கண்டுபிடியுங்கள், சோதனைகள், கண்ணாடி உபகரணங்கள் கருவிகள், பௌதிக பொருட்கள், இரசாயனப் பொருட்கள், திட, திரவ,வாயுப் பொருட்கள்,அட்டவணைகள் மற்றும் குறியீடு.
கணக்குப் பாடப்பிரிவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் - அளவு கோல், பாகைமாணி, மூலை மட்டம், அளவு நாடா, வட்டம், முக்கோணம், செவ்வகம், கூம்பு, கோலம், சதுரம் மற்றும் கன சதுரங்கள்.
புவியியல் பாடத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் - பூமி உருண்டை, சூரிய கிரகணங்களைக் காட்டும் மாதிரிக் கருவி, தேசப்படங்கள், வானிலை பற்றிய இன்சாட் 1 - படங்கள் (செயற்கைக் கோள்கள்) மாலைகள், ஆறுகள், விளை பொருட்கள், அணைகள் சாலைகளைக் குறிப்பிடும் விளக்கம் படங்கள்.
வரலாறு பாடத்தில் பயன்படும் உபகரணங்கள் - கல்வெட்டுகள், சிலைகள், மண் பாண்டங்கள், நாணயங்கள், உலோகப் பொருட்கள்.
கரும்பலகையில் என்ன நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும் - கறுப்பு அல்லது பச்சை
கரும்பலகையில் ஓர் ஆண்டில் எத்தனை முறை வர்ணம் தீட்ட வேண்டும் -இரண்டு முறை.
கரும்பலகை அமைப்பின் அளவு - 4 அடி அகலம், 16 அடி நீளம்.
கரும்பலகையில் ஆசிரியரின் எழுத்துக்கள் எத்தனை பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் - 1.வடிவம் 2, பருமன் 3. சாய்வு 4 போதிய இடைவெளி 5. விரைவாக எழுதல்
கரும்பலகையில் தினசரி எழுதவேண்டியவை - பிள்ளைகளின் வருகைப் பதிவு, இருப்பு, தேதி.
கரும்பலகையின் பயன்கள் - பாடச் சுருக்கம் எழுத, புதிய சொற்களை கற்பிக்க, படம் விரிவடிவம் வரைய, செயல்முறைகளை விளக்குவதற்கு.
கரும்பலகையில் எழுதும்போது பின்பற்ற வேண்டியவை - நன்றாக வரிசைப் படுத்தி எழுத வேண்டும், சுத்தமாக, தெளிவாக, அழகாக, விரைவாகவும் எழுத வேண்டும். எழுத்துக்களை, பெரிதாக எழுத வேண்டும். தேவையான இடங்களில் வண்ணச் சாக்கட்டி பயன்படுத்த வேண்டும்.
கலை, கைத்தொழில் பாடங்களைக் கற்பிக்க என்ன மாதிரி உருவங்கள் பயன்படுகின்றன- மரம், அட்டை, வைக்கோல், பலகை, பாரிஸ் சாந்து, களிமண், மெழுகு, காகிதக் கூழ்.
மாதிரி உருவங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் - கவர்ச்சி ஏற்பட்டு மாணவன் கற்க ஆரம்பிக்கிறான். இரு விதங்களில் பாட விளக்கம் கிடைக்கிறது. கலை உணர்வு ஏற்படுகிறது. பாட விளக்கமும், விருப்பமும் ஏற்படுகிறது.
கற்பிப்பதில் படங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் - மனதில் நிலைநிறுத்த.
கற்பித்தலில் பயன்படுத்தப்படும் படங்கள் - இயற்கைக் காட்சி, விலங்குகள், பறவைகள், தேசியத்தலைவர்களின் நிழற்படங்கள், விளக்கப்படங்கள்.
பயன்படுத்தப்படும் படங்களின் நன்மைகள் - படங்கள் பெரிதாகவும், தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் பல்வேறு வண்ணப்படங்களாக கவர்ச்சியாக இருக்க வேண்டும்.
தொழில் கலைப்பாடங்களைக் கற்க என்ன படங்கள் தேவைப்படும் - விளக்கப் படங்கள்.
பாடப் புத்தகங்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் - நேரடி அனுபவம் மற்றும் செயல்முறைகளுக்கு இடமில்லை. மாணவரின் சிந்தனைத் திறனுக்கு இடமில்லை, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பில்லை.
சிறந்த பாடப் புத்தகங்கள் என்பது -
அதிகமான படங்கள், விளக்கப்படம் மற்றும் வரைப்படம் இடம் மாற வேண்டும். எளிய மொழியால் விளங்குமாறு கருத்துக்கள் வேண்டும் மாணவர்களின் அறிவுத்திறன், அனுபவம் வயது மற்றும் உரிய வகுப்பிற்குரிய தன்மையுடன் இருக்க வேண்டும். அச்சிடப்படும் காகிதம் நல்ல தரமானதாக இருக்க வேண்டும்.
அகராதிகள் குறிப்பு எடுக்காததாகவும், ஏடுகள் தமிழ் களஞ்சிய மலர்கள் புதிய கண்டுபிடிப்புகள் புராதன ஓலைச்சுவடிகள் மேற்கோள் நூல்கள்.
மேற்கோள் நூல் என்பது - ஒரு பாடத்தைப் பற்றி மேலும் விளக்கமாக அறிய வேண்டுமெனில் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் விரிவான புத்தகங்கள் இருக்கும். இவற்றை மேற்கோள் நூல்கள் என்கிறோம்.
செய்திப் படங்களின் நோக்கம் - கலை, கலைத்தொழில், உலக சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள், கிரகணங்கள், செயற்கைக் கோள்கள், விண்மீன்கள், மற்றும் பல நிகழ்வுகளை தெரிந்துகொள்ள.
வானொலியின் நோக்கம் -
உலகில் நடக்கும் செய்தியை உடனுக்குடன் அறிய முடியும். கல்வி ஒலிப்பரப்பைக் கேட்பதன் மூலம் பொது அறிவு வளரும்.
பள்ளிப் பொருட்காட்சி அமைக்கும் முறை - ஒவ்வொரு பொருட்களைப் பற்றிய குறிப்பு தயாரிக்க வேண்டும், பொருட்காட்சிக்கு ஒரு தனி அறை ஒதுக்க வேண்டும் பொருட்காட்சி இருப்பிடம், போதிய வெளிச்சம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
கல்விப் பயணம் அழைத்துச் செல்வதின் நோக்கம் - நேரடி அனுபவம் கிடைக்கும்.
கல்வி பயணத்தின் நோக்கம் - ஆசிரியர், மாணவர் உறவு மேம்படும். தன்னம்பிக்கை, சமுதாயப் பண்பு, வளர்கிறது. மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவர்களிடையே கூட்டுறவு, நட்பு, நற்குணங்கள் ஏற்படும்.
கல்விப் பயணங்களுக்கு எந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும்? -- கலை, தொழில், விஞ்ஞானம், பண்பாடு, சரித்திரம், புவியியல் சார்ந்த இடங்கள்.
பாடத்திட்டம் என்பது - ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் ஆசிரியர் அனைவருக்கும் தனித்தனியாக ஓர் ஆண்டில் கற்பிக்க வேண்டிய பாடங்களின் அளவுக்கு தயார் செய்வது.
ஆசிரியர் பாடத் திட்டத்தை எவ்வாறு திட்ட மிட வேண்டும் - எளிமையான பாடப் பகுதியிலிருந்து கடினமான கேள்விகளுக்கு பொருளறிவியிருந்து பகுத்தறிவுக்குச் செல்ல வேண்டும்.
பாடக் குறிப்பு தயார் செய்வதில் பின்பற்ற வேண்டிய விவரங்கள் - நோக்கம், அவசியம், முன்னுரை, விவரித்தில், செய்து காட்டல், வினா கேட்டல், திருப்புதல், வீட்டு வேலையைக் குறிப்பிடுதல்.
ஆசிரியர் பாடக் குறிப்பு தயார் செய்வதால் ஏற்படும் நன்மைகள் - தன்னம்பிக்கையும், ஆர்வமும், முயற்சியும் ஏற்படும். ஆசிரியரின் பணியை பாடக்குறிப்பு தீர்மானிக்கிறது. நோக்கத்தை வீணடிக்காமல் திட்டமிட்ட படி கற்பிக்க முடியும்.
போதனைப் படிகளை வரிசைப்படித்தியவர் - ஹேர்பார்டியன் என்ற உளநூல் அறிஞர்.
ஹேர்பார்டியன் படிநிலைகள் - ஆயத்தம் அல்லது தயார் செய்தல், முன்வைத்தல், விளக்கமளித்தல், ஒழுங்குபடுத்துதல்.
ஆயத்தம் என்பது - மாணவனை எழுந்து நிற்கச் செய்வது, சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பு ஏற்படுத்துவது, சிறு விளக்கங்களின் மூலம் பாடத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்வது.
முன் வைத்தல் என்பது - அன்றைய பாடத்தலைப்பை; விரிவாகக் கூறுவது, கருத்துக்களை விளக்குவது, ஆர்வம் ஏற்படச் செய்வது.
விளக்கமளித்தல் என்பது - விவரங்களை விளக்குதல், சாதனங்களை பயன்படுத்துதல், படங்கள் கதைகளை விளக்குதல்.
ஒழுங்குப்படுத்துதல் என்பது - கற்றவைகளை வரிசைப்படுத்துதல், பயிற்சி அளித்தல், மீள் பார்வை.
நடைமுறைப் படுத்துதல் என்பது -பரிசீலித்தல், சோதித்தல், வாய்மொழி வினா, எழுத்து வினா, வாய்மொழிக் கணக்கு, படம் வரையச் செய்தல், வீட்டு வேலை கொடுப்பது.
அறிவுவகைப் பாடங்களின் படிநிலைகள்:
1) ஆயத்தம் அல்லது தயார் செய்தல்
2) முன் வைத்தல்
3) விளக்கமளித்தல்
4) ஒருங்குபடுத்துதல்
5) கற்றவைகளை நடைமுறைப்படுத்துதல்
திறன்வகைப் பாடங்களின் படிநிலைகள் :
1) திட்டமிடல்
2) தயாரித்தல்
3) வேலை செய்தல்
4) வேலையை முடித்தல்
5) பதிவு செய்தல்
6) மதிப்பிடுதல்
சுவையுணர்வு வகைப் பாடங்களின் படிநிலைகள்:
1) ஆயத்தம்;
2) விளக்குதல்
3) ஆராய்தல்
மதிப்பிடுதல் என்பது - ஆசிரியர் கற்பித்த பாடங்களை எந்தளவிற்கு புரிந்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிப்பதே.
ஆசிரியர் மதிப்பீடுகள் எதன் அடிப்படையிலானது - தரம், செயற்பாடு, திருத்தங்கள், மறுபரிசீலனை.
மதிப்பெண் வழக்கும் முறை என்பது - 1 முதல் 100 வரை மொத்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பை எழுத்து (Letter marks) மூலம் குறிப்பிடுதல் மாணவர்களின் பழக்கங்கள், திறமை. மனநிலை நடத்தை, செயல் மதிப்பிட ABC என்ற ஆங்கில எழுத்து
அ) மேல்நிலை (நன்று)
ஆ) நடுத்தரம் (சுமார்)
இ) கடை நிலை (மோசம்)
மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு விளக்கக் குறிப்பு எழுதும் முறை மூலம் பிரிக்கிறார்கள் - எண், எழுத்து, அடிப்படையில் மற்றும் ; மதிப்பீட்டாலும் விளக்கக் குறிப்பு முறையாலும்.
பல்வேறு சோதனையின் வகைகள்
1. வாய்வழிச் சோதனை
2. எழுத்துச் சோதனை
3. செய்து காட்டும் சோதனை
வாய்வழிச் சோதனை - ஞாபகசக்தியை அதிகரிக்கலாம், அறிவை எளிதில் சோதிக்கலாம்
எழுத்துச் சோதனை - மாணவனின் தரத்தை மதிப்பிடவும், தேர்ச்சி அறிக்கை கொடுக்கவும் உதவும்.
செய்து காட்டும் அல்லது செயல் முறைச் சோதனை - துணி நெய்தல், தையல் துணி, தட்டச்சு செய்தல், பல்வேறு பணிகளையும் சோதனை மற்றும் செய்து காட்டல் மூலம் மதிப்பிட முடியும்.
சோதனைகளின் வகைகள்
1. நுண்ணறிவுச் சோதனை
2. தனிவிருப்பச் சோதனை
3. திறன் அறிய விரும்பும் சோதனை
4. கவர்ச்சிச் சோதனை
5. குறையறிவுச் சோதனை
6. முன்னறிவுச் சோதனை
7. எழுத்துச் சோதனை
8. படச் சோதனை
9. வாய்வழிச் சோதனை
10. செயல் திறன் சோதனை
11. தனியாளியல் சோதனை
குறையறிச் சோதனை - மாணவர்களிடத்தில் கற்றலில் காணப்படும் குறைபாடுகள், நடை முறைச் சிரமங்கள் அறியும் சோதனை
தேர்வு நடத்துவதின் அவசியம் -
ஆசிரியர் பணிகளை மதிப்பிடவும், தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க மாணவர்களிடையே உற்சாகம் ஏற்பட மேல் வகுப்புக்குத் தேர்ந்தெடுக்க.
தேர்வுகளின் குறைபாடுகள் -
அடிக்கடி தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும்.
தேர்வினால் ஏற்படும் நன்மைகள் -
மாணவர்கள் கற்ற அறிவைப் பயன்படுத்த முடியும். ஆர்வத்துடன் வேலை செய்ய, படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் திறனை முடிவு செய்து சான்றிதழ்கள் வழங்க முடியும்.
பழைய வினாத்தாள் முறைகள்- விரிவாகக் கட்டுரை வடிவில் கேட்கப்பட்டது. குறிப்பு வரைதல் ஒப்பிட்டு விளக்குதல்.
புதிய வினாத்தாள் முறைகள் -
சுருக்கமாகவும், தெளிவாகவும் விரிவாகவும் உள்ளன.
பழைய வினாத்தாள் முறையின் சிறப்பியல்புகள் - விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கலாம். கையெழுத்து மொழிநடை, பிழையின்றி எழுதல், குறைவான வினா, செலவு, முடிவு.
பழைய வினாத்தாளின் குறைகள் -
ஆசிரியர் மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கேற்ப முழு மதிப்பெண்கள் கிடைக்காது. மாணவர்களின் முழுத்திறனையும் அளவிட முடியாது. மதிப்பீடு ஒரே அளவில் செய்வதில்லை.
புதுமாதிரி வினாக்களின் சிறப்புகள் -
மனப்பாடம் செய்ய வாய்ப்பில்லை, மாணவர்களின் உண்மையான திறனை அளவிட முடியும். விரைவாகவும், எளிதிலும் மதிப்பீடு செய்யலாம், மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை.
புதுமாதிரி வினாக்களின் குறைகள் -
மாணவர்கள் சிந்திக்காமல் உடனடியாக விடையளிக்காமல், ஒப்பிட்டுத்திறன், கட்டுரை, எழுதல், வரிசைப் படுத்துதல், எழுதும் திறன், திறமைகளை சரியாக சோதிக்க முடியாது, சிந்திக்கும் திறன், மொழி நடை, இலக்கண நடையை சரியாக மதிப்பிட முடியாது.
ஏற்புடைமை என்பது - எந்தக் குறிப்பிட்ட அறிவுப் பகுதியைச் சோதிக்க விரும்புகிறாமோ அக்குறிப்பிட்ட அறிவுப் பகுதியை மட்டும் சோதிப்பது.
நம்பகத் தன்மை என்பது - ஒரு சோதனையை எத்தனை முறை சோதித்தாலும் ஒரே மாதிரி விடை அமைவது.
மாறுபாடின்மை என்பது - ஒரு முறைக்கு இருமுறை ஒருவனுடைய விடையைத் திருத்தினாலும் அவன் பெறும் மதிப்பெண் மாறக்கூடாது.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் என்பது - மதிப்பெண்களை பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டும். பாரசட்சமின்றி மதீப்பீடு செய்தல் வேண்டும். மொழிப்பாடத்தில் மட்டும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்க வேண்டும்.
மொழிப்பாடம் தவிர்த்து மற்ற பாடங்களை எவ்வாறு திருத்துவது- மற்ற பாடங்களை பொருத்தமட்டில் பிழைகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம், மதிப்பெண் குறையக் கூடா