Monday, February 27, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்த விவரங்கள், அரசு கெஜட்டில் வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்; இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 comments:

  1. When coming TET Exam 2013. please mail me sudhan2628@gmail.com


    sudhakar.
    salem

    ReplyDelete
  2. when coming DTED 2012 RESULTS IN PRIVATE CANDIDATE. PLEASE MAIL ME sudhan2628@gmail.com


    sudhakar
    salem

    ReplyDelete
  3. m.com bed can write tntet exam 2013?

    ReplyDelete